Header Ads Widget

<

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை எச்சரிக்கை!! | TAMILNADU RAIN SCHOOL HOLIDAY NEWS TODAY 04.07.2023



தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை  பெய்யக்கூடும். மேலும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். நாளை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் நாளை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் கனமழையின் தீவிரத்தை பொறுத்து மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


மீனவர்களுக்காக எச்சரிக்கை :

தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.