Header Ads Widget

<

வக்ர சனி பெயர்ச்சி 2023 விருச்சிக ராசிக்கு வரப்போகும் அதிர்ஷ்ட யோகம் | VAKRA SANI PEYARCHI VIRUCHIGAM RASI PALAN 2023 IN TAMIL



விருச்சிகம் : (SCORPIO) விருச்சிக ராசி அன்பர்களே ஜூன் 17ம் தேதியிலிருந்து நவம்பர் 4ம் தேதி வரை சனிபகவான் வக்ர நிலையிலேயே இருக்க போகிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு சுய, லாப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்வதால், இதுநாள் வரை ஏற்பட்டு வந்த இடையூறுகள் நீங்கி நன்மைகள் நடக்கும். மனதில் அமைதியும், நிம்மதியும் இருக்கும். அஷ்டம சனியால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி, வக்ர சனி எதிர்பாராத மாற்றங்களை சனி பகவான் உங்களுக்கு தரப்போர்க்கிறார். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வீடு, மனை, புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும், பதவி உயர்வு, ஊதிய உயர்வு இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்ல்லது. குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீக்கினாலும், ஈகோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்பட்டு எடுக்க கூடாது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. மூன்றாவது நபரை நம்பி உங்கள் ரகசியங்களை சொல்ல வேண்டாம். மாணவர்களின் மேற்படிப்புக்கு திட்டமிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்கும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நன்றாக இருக்கும். நீண்டநாள் இருந்த உடல் உபாதைகள் அகலும். வயதானவர்கள் நோய் பாதிப்புகள் குறைய சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்க நன்மை உண்டாகும்.