Header Ads Widget

<

வக்ர சனிப்பெயர்ச்சி 2023 அதிர்ஷ்ட யோகம் பெரும் ராசிகள் - VAKRA SANI PEYARCHI INDRAIYA RASI PALANGAL JUNE 2023 IN TAMIL


சனி வக்ர பெயர்ச்சி 2023ல் வெற்றி மேல் வெற்றியும், செல்வத்தையும், ராஜயோகத்தையும் பெறப்போகும் போகும் ராசிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். சனி பகவான்  இந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி முதல் கும்ப ராசியிலிருந்து வக்ர நிலை அடைய உள்ளார். நவம்பர் மாதம் 4ம் தேதி 2023 வரை வக்ர நிலையில் கும்ப ராசியில் பின்னோக்கி நகர விருக்கிறார். இதன் காலம் 140 நாட்கள் ஆகும். சனி பகவான் இந்த வக்ர காலத்தில் 5 ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரப்போகிறார். ஆகவே இந்த அதிர்ஷ்டம் பெரும் ராசிகளின் பலன்களை இங்கே பார்ப்போம்.

மேஷம் : (MESHAM)  மேஷ ராசி அன்பர்களே வக்ர சனி பெயர்ச்சி காரணமாக சனிபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரப்போகிறார். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு விரும்பிய பள்ளி மற்றும் கல்லுரிகளில் இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே வக்ர சனி பெயர்ச்சி காரணமாக சனிபகவான் உங்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போகிறார். ராஜயோகத்தால் விரும்பிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை உயரும். உங்கள் வேலையில் வலுவான முன்னேற்றமும், நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.பணவரவு அதிகரிக்கும்.  நீண்ட நாள் இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்.

மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே வக்ர சனி பெயர்ச்சி காரணமாக சனிபகவான் உங்களுக்கு ராஜயோகம் பெரும் வகையில் பல நன்மைகளை தரப்போகிறார். உங்களின் விடாமுயற்சியால் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். வெளியூர் பயணம் மனதிற்கு இன்பம் தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : (SIMMAM)  சிம்ம ராசி அன்பர்களே வக்ர சனி பெயர்ச்சி காரணமாக சனிபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரப்போகிறார். பொருளாதார நிலை வாழ்வில் மிகவும் உயரத்திற்கு கொண்டு செல்லும். நீங்கள் செய்ய நினைத்து தடைபட்ட செயல்கள் நல்ல முறையில் முடியும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் நல்ல பலனை தரும். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே வக்ர சனி பெயர்ச்சி காரணமாக சனிபகவான் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரப்போகிறார்.  பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பல்வேறு வகைகளில் பணம் வந்து சேரும். குடும்பத்தில் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய  நிகழ்ச்சிகள் நடைபெறும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதை கிடைக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.