Header Ads Widget

<

பள்ளிகள் திறப்பு தேதி 2023 மீண்டும் புதிய மாற்றம் வெளியான அறிவிப்பு | TAMILNADU SCHOOL REOPEN DATE EXTENSION LATEST NEWS 2023


தமிழ்நாட்டில் 2022-2023 கல்வி ஆண்டு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு, ஒன்றாம் வகுப்பு முதல் 5ம்  வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால் தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருந்தது. பல மாவட்டங்களில்  தினந்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை இருந்தது. கடுமையான வெயிலின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  இதனை ஆலோசித்த தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை ஜூன்  7ம் தேதி தள்ளிவைத்து. ஆனால் சென்னையில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களை வரவழைத்து பள்ளிகள் திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக அரசு அறிவித்த தேதிக்கு முன்பாக திறந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்தது. இதனையும் மீறி ஒருசில தனியார் பள்ளிகள் திறந்ததால் அந்த பள்ளிகள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையும் மீறி தனியார் பள்ளிகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டும் அதுவும் 10ம் வகுப்பிற்கு மேல் பள்ளிகள் திறக்கலாம். மற்றபடி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் திறந்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



இந்த நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பிறகும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.  தமிழகத்தில் சில மாவட்டங்களில் 107 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியது. வெயிலின் தாக்கம் குறையாமல், இருந்ததால் ஏற்கனவே பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடும் வெயில் காரணமாக மீண்டும் பள்ளிகள் திறப்பை 1ம் வகுப்பு முதல் 5ம்  வகுப்பு வரை ஜூன் 14 ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். தற்போது பள்ளிகள் திறக்க ஒரு சில நாட்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் வெயில் அதிகமாக இருப்பதால் சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தேதியை அம்மாநில அரசுகள் ஒத்திவைத்துள்ளன. அந்த வரிசையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோடை விடுமுறை மேலும் 11 நாட்கள் நீடிக்கப்பட்டு ஜூன் 27ம் தேதி அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. சில நேரங்களில்  மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. மழை பெய்தாலும் வெப்பம் குறைந்தபாடில்லை. இதனால்  சிலருக்கு வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. ஆனால் பள்ளிகள் திறந்த பிறகு, மாணவர்களுக்கு வழங்க பாட புத்தகம், சீருடை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்கனவே இரண்டுமுறை பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போதும் வெப்பம் குறையாமல் உள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.