Header Ads Widget

<

ஜூலை மாதம் 2023 மிதுன ராசிக்கு வரப்போகும் அதிர்ஷ்ட யோகம் - JULY MONTH MITHUNA RASI PALAN IN TAMIL 2023



மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு  அற்புத மாதமாக அமைந்துள்ளது. ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசியில் சில நாட்கள் பயணம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் நீங்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் தேடி வரும். நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாள் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். அஸ்தம சனி காலத்தில் வேலையை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ராகு உடன் குரு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் இந்த காலத்தில் செல்வம் கொழிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சூரிய பகவான் மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பேச்சில் கவனம் தேவை. பெண்களுக்கு உற்சாகமான மாதம் ஆகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுறு சுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு அற்புதமான காலம் ஆகும். உயர்கல்விக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் இருந்து வந்த உடல் உபாதைகள் அகலும். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி தரும்.