Header Ads Widget

<

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை | TAMILNADU RAIN LATEST NEWS TODAY 05.05.2023


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். மேலும் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 3ம் தேதி  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 4ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 5ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.