Header Ads Widget

<

சந்திர கிரகணம் 2023 அன்று செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை - MOON & LUNAR ECLIPSE PRECAUTIONS DATE AND TIME 2023



சந்திர கிரகணம் : சூரியன்,  பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால், சந்திரன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும் நிகழ்விற்கு சந்திர கிரகணம் என்று பெயர். இந்த சந்திர கிரகணம் பௌர்ணமி நாள் அன்று நிகழக்கூடியவை ஆகும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 5ம் தேதி இரவு 8.44 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 1.00 மணிக்கு முடிகிறது. இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, பசுபிக் பெருங்கடல் , அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தெரியும்.

கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம்

எளிய பரிகாரம்

கிரகண பரிகாரம் செய்ய முடியாதவர்கள், மந்திரங்கள் தெரியாவிட்டாலும், கிரகண நேரத்தில் ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவயா, ஓம் சரவணபவ போன்ற எளிய மந்திரங்களை உச்சரிக்கலாம். கிரகணம் முடிந்ததும், தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள், மூன்று வேப்பிலை கலந்து குளித்து தோஷ நிவர்த்தி பரிகாரத்தை செய்யலாம்.

கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை 

1.கிரகணம் நடைபெறும் சமயத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும். ஏனென்றால் கிரகண அலைகள் நம்மை தாக்காமல் இருக்க குறிப்பாக கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் உடல் பலஹீனமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

2.கிரகணம் நடைபெறும் சமயத்தில் சாப்பிடக் கூடாது. கிரகணத்தின் ஒரு மணிநேரத்திற்கு முன்போ அல்லது பின்போதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் கிரகண சமயத்தில் உடலில் செரிமானத்தை குறைப்பதுடன் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். 

3.பாலூட்டும் தாய்மார்கள் கிரகண நேரத்தில் குழந்தைக்கு பாலூட்ட நேரிட்டால், அந்த நேரத்தில் குழந்தையின் மேல் கருப்பு துணி போர்த்தி பாலூட்ட வேண்டும்.

4.கிரகணம் நடைபெறும் சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் (Pregnant Women) கத்தி போன்ற கூர்மையான பொருள்களை தொடவோ, கையில் வைத்திருக்கவோ கூடாது.

5.கிரகண நேரத்தில் சண்டை, அவதூறு சொற்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை 

1.கிரகணம் நடைபெறும் சமயத்தில் சமைத்த உணவுகள் மீது தர்ப்பை புல்லை வைக்க வேண்டும். ஏனென்றால் தர்ப்பை புல்லுக்கு எதிர்மறை சக்திகளை தடுக்கும் ஆற்றல் உண்டு.

2.கிரகணம் நடைபெறும் சமயத்தில் இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்ல பலனை தரும்.

3.கிரகணம் முடிந்த பின்பு வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் குளித்து சுத்தமான பின்னர், சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வழிபட நன்மை உண்டாகும்.