சந்திர கிரகணம் : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ம் தேதி மாலை 3.14 மணிக்கு தொடங்கி, 7.31 மணிவரை நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இரவு 8.44 மணிக்கு தொடங்கி இரவு 10.53 மணிக்கு உச்சநிலை பெற்று மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த கிரகணத்தின் போது பாதிப்பு ஏற்படக்கூடிய ராசிகள் மற்றும் பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த சந்திர கிரகணத்தின் போது மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. புதிய நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். எதிலும் பொறுமை அவசியம் தேவை. பிறரிடம் பேசும் போது கவனம் தேவை. கிரகணம் ஏற்படும் சமயத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பொறுமை காப்பது அவசியம்.
ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த சந்திர கிரகணத்தின் போது பேசும் வார்த்தையில் நிதானமுடனும், கவனமுடனும் பேசுவது அவசியம். கிரகணத்தின் போது தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒரு சிலர் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க கடன் வாங்க நேரிடலாம். கிரகணத்தின் போது வெளியே செல்வதை தவிர்க்கவும்.
சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே இந்த சந்திர கிரகணத்தின் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எந்த ஒரு செயல் செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மே மாதம் 2023 ராஜயோகம் பெரும் ராசிகள் முழு விபரம்
கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இந்த சந்திர கிரகணத்தின் போது சில உடல் உபாதைகள் வரலாம். வண்டி, வாகனங்களில் செல்லும் போது அதிக கவனமுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணியில் தடை, தாமதம் போன்றவை ஏற்படலாம். சக பணியாளரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய நபர்களின் நட்பை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
பரிகாரங்கள் : கிரகணத்தின் போது உங்களின் மனதிற்கு பிடித்த தெய்வங்களை நினைத்து ஜபம், தியானம் செய்வது நல்லது. சிவபுராணம் சொல்வது அல்லது கேட்பது நன்மையை தரும். ஸ்ரீ ராமஜெயம், ஓம் நமசிவாய, ஓம் சரவண பவ போன்ற மந்திரங்களை உச்சரிக்கலாம். சந்திர கிரகணம் முடிந்ததும், வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரவும். அரிசி, கோதுமை, நல்லெண்ணெய் போன்றவற்றை தானம் தருவது மிகுந்த பலனை தரும்.