மிதுனம் : மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக அபிவிருத்தி செய்வவோ, புதிய தொழில் தொடங்கவோ செய்யலாம். உழைப்பிற்கேற்ற நல்ல லாபம் இருக்கும். ஆனால் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். மாதத்தின் முதல் பாதியில் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் நடைபெறும். இரண்டாம் இடத்தில சுக்கிர பகவானும், செவ்வாய் பகவானும் உள்ளனர். இதனால் வேலைவாய்ப்பினை பொறுத்தவரை மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு சுப செலவுகள் ஏற்படலாம். ஒன்பதாம் ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுவதால் முன்னோர்கள் சம்பந்தமான விஷயங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். உங்களின் முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பிறரிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லதரசிகள் இந்த மாதம் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்களை பொறுத்தவரை உயர் கல்வி சார்த்த விஷயங்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை தேவை. இந்த மாதம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.