Header Ads Widget

<

ஜூன் மாதம் 2023 ரிஷப ராசிக்கு வரப்போகும் ராஜயோகம் | JUNE MONTH RASI PALAN 2023 RISHABAM IN TAMIL


ரிஷபம் : ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு லக்கனத்தில் 9 நாட்கள் சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் அமைந்திருப்பதால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் மாதமாக அமையும். புதன் பகவான் பொருளாதார ரீதியாக ஏற்றத்தினை கொடுப்பார். நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். பெண்களின் திறமை அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்த மனக்குழப்பம் நீங்கி மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். உங்களின் கோபங்கள் நீங்கி அனைவரிடம் அன்பு காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக சில அலைச்சல்களை மேற்கொள்ளலாம். பணவரவு அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் உடன் பிறப்புகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் பேசும் போது தேவையற்ற பேச்சை குறைக்கவும். திருமண காரியங்களை பொறுத்தவரை குரு பலன் இல்லாவிட்டாலும் எதிர்பார்த்த வரன் அமையும். தற்போதைக்கு திருமண தேதியை குறிக்க வேண்டாம். புதிய வேலைக்கு எடுக்கும் முயற்சிகளை தள்ளி வைத்து விட்டு இருக்கிற வேலையை திறம்பட செய்வது நல்லது. குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு பரஸ்பரம் உண்டாகும். இல்லத்தரசிகளுக்கு மனநிம்மதி பிறக்கும். பெண்கள் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவார்கள். மாணவர்களை பொறுத்தவரை கல்வி சார்ந்த விசயங்களை தேர்ந்தெடுப்பதில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

இவ்வளவு சீக்கிரம் உடல் எடை குறையும் அதிசயம்