துலாம் : துலாம் ராசி அன்பர்களே இந்த மாதம் சுக்கிரன், செவ்வாய் சேருவதால் கூட்டு தொழில் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோசம் பெருகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் என்றாலே சுகம் என்று முன்னோர்கள் கூறுவார்கள் அதன்படி இந்த மாதம் பெண்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். இதனால் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தொழில், பங்குச்சந்தை, இன்சூரன்ஸ் போன்ற முதலீடுகள் நல்ல பலனை கொடுக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அரசு துறையில் வேலை செய்பவர்களில் சிலருக்கு பணியில் இட மாற்றம் இருக்கும். திருமண காரியங்களை பொறுத்தவரை சிறு சிறு தடங்கல் இருந்தாலும் நினைத்த வரன் கிடைக்கும்.
ஜூன் 17ம் தேதிக்கு பிறகு சனி வக்கிரம் அடையும் போது கணவன், மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சார்த்த பிரச்சனைகள் வரலாம் வரலாம். சிலர் கடன் வாங்க நேரிடலாம். உறவினர்கள் மூலம் சிலருக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. மாத பிற்பகுதியில் நீங்கள் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். எந்த ஒரு செயலும் யோசித்து செய்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இந்த மாத இறுதியில் நல்ல பலன் கிடைக்கும். மாணவர்களை பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக செயல்படுவார்கள். நினைத்த காரியம் நிறைவேறும். ஆனால் உயர்கல்விக்காக கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். இல்லத்தரசிகள் உறவினர்களின் வீட்டிற்கு சென்று வருவார்கள். பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி அடைவீர்கள்.
இந்த சின்ன பழத்தில் இவ்வளவு சத்து இருக்கா ஆச்சர்யமூட்டும் பழம்