சிம்மம் : சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் 9 நாட்களுக்கு இருக்கப்போவதால் தொழில் லாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது அதை தள்ளி வைப்பது நல்லது. இருக்கிற வேலையை திறம்பட செய்யுங்கள். இந்த மாதம் பனிரெண்டாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் அமையவுள்ளது. இதனால் செலவுகள் அதிகரிக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. புதிய முயற்சிகள் எடுக்கும் பட்சத்தில் சில முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் தடைகள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்யுங்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். சிலருக்கு பிரிய கூடிய சூழ்நிலை வரலாம். பொறுமையை கையாள்வது அவசியம். சனி வக்ரம் பெரும் போது அதாவது 7வது இடத்தில் இருக்கும் போது அதன் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம். திருமண காரியங்கள் பொறுத்தவரை தடைகள் நீடிக்கும். நல்ல வரன் அமைய பொறுமையாக இருக்க வேண்டும். காதலிப்பவர்கள் பேசும் வார்த்தையில் கவனம் தேவை, இல்லையென்றால் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு புதன் பகவான் இடப்பெயர்ச்சி புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். உயர் கல்விக்காக அதிக செலவு செய்யும் நிலை ஏற்படலாம். பெண்களுக்கு இந்த மாதம் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் வரலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.