கன்னி : கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு சூரியனும், புதனும் ஒன்பதாம் இடத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கிறார்கள். ஆகையால் உங்களின் பூர்வீக சொத்து உள்ளிட்ட சொத்துக்கள் சம்பந்தமான அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்க யோகம் உண்டு. வேலைவாய்ப்பினை பொறுத்தவரை புதன் சுக்கிரன் ஆதரவால் நீங்கள் சாதகமான பலனை பெறுவீர்கள். உங்களின் விடா முயற்சி வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். சுக்கிரனும் செவ்வாயும் 11ம் இடத்தில இருப்பதால் நல்ல லாபம் உண்டு. பெண்கள் தங்கள் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளும் மாதமாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த மாதம் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடியும் எடுக்க வேண்டாம். இந்த மாதம் பிறரிடம் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. மற்றவர்களை எளிதில் நம்ப வேண்டாம். மாணவர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்களின் எதிர்காலம் குறித்து சிறந்த திட்டங்களை தீட்டலாம். நினைத்த இடத்தில் மேற்படிப்புக்கான இடம் கிடைக்கும். மேலும் உயர்கல்விக்கு அதிக செலவு செய்ய நேரிடும். கல்விக்காக கடன் வாங்க நேரிடலாம். சனி பகவானின் வக்கிர பெயர்ச்சியினால் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். இந்த மாதம் பணவரவு இருந்தாலும் மருத்துவ செலவு இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.