Header Ads Widget

<

ஜூன் மாதம் 2023 கடக ராசிக்கு வரப்போகும் அற்புத யோகம் | JUNE MONTH RASI PALAN 2023 KADAGAM IN TAMIL


கடகம் : கடக ராசி அன்பர்களே இந்த மாதம்  தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். லக்கனத்தில் சுக்கிர, செவ்வாய் சேர்க்கை இருப்பதால் வாழ்க்கையில் தள்ளிப்போன பல முக்கியமான விஷயங்கள் அனைத்தும் எதிர்பாராமல் நடந்து முடியும். நினைத்த காரியம் நிறைவேறும். பணியிடத்த்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெற்றோர்களிடம் இருந்து நல்ல பலன்களை அடைவீர்கள். திருமண காரியங்களை பொறுத்தவரை சில தடைகள் வந்தாலும் சாதகமாகவே அமையும். பிறரிடம் பேசும் போது பேச்சில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வரலாம். ஒரு சிலருக்கு பிரியும் நிலை ஏற்படலாம். உங்களின் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. ஆகவே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது உத்தமம். கணவரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். மாணவர்களை பொறுத்தவரை விரும்பிய படங்களை தேர்வு செய்வீர்கள். உயர் கல்விக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இது நாள் வரை இருந்த தோல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். உணவு பழக்க வழக்கங்களில் சத்தான மற்றும்  ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களின் பிரச்சனைகள் குறைய இந்த மாதத்தில் முனீஸ்வரரை வழிபாடு செய்யலாம். 

60 வயதிலும் நரைமுடி கறுப்பாகும் அதிசயம்