சூரிய கிரகணம் : சந்திரன் பூமியையும், பூமி சூரியனை சுற்றி வரும் நிலையில், சூரியன் - பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும் நிகழ்விற்கு சூரிய கிரகணம் என்று பெயர்.
கிரகணம் நிகழும் நேரம் : இந்த சூரிய கிரகணம் வருகிற ஏப்ரல் மாதம் 20ம் தேதி காலை 7.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 வரை நீடிக்கும். காலை 9.46 மணிக்கு சூரிய கிரகணத்தின் உச்சநிலையாக முழு சூரிய கிரகணம் ஏற்படும். இந்த சூரிய கிரகணத்தின் போது கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.
மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியிலேயே நடக்க உள்ளதால் உங்களின் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். மனக்குழப்பம் உண்டாக வாய்ப்புள்ளதால், எந்த ஒரு முடிவையும் எடுக்க சிரமப்பட வேண்டியிருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேசவும். வீண் வாதங்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல தடவை யோசித்து செய்யவும்.
ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் உங்கள் வாழ்வில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இதனால் மற்றவர்களிடம் கோபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே சூழ்நிலைக்கு தகுந்தவாறு பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வரவுக்கு மீறி செலவுகள் செய்ய வாய்ப்பு உண்டு. திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை கவனம் தேவை.
கன்னி : (KANNI) கன்னி ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் தொழில் மற்றும் வியாபாரங்களில் ஏற்ற இறக்கங்கள் காண கூடும். திட்டமிட்டு செயல்பட்டால் நஷ்டம் வராமல் தடுக்கலாம். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சில பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆகவே பொறுமையை கையாள்வது அவசியம். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் உங்களின் நிதிநிலை சார்ந்த பிரச்சனைகள் வரலாம். எங்கு முதலீடு செய்தாலும் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆகையால் முதலீடு செய்வதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் பிரச்சனைகள் வரலாம். சிலருக்கு குடும்ப விரிசல்கள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது.
விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் உங்கள் வாழ்க்கையில் பாதகமான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பம் சம்பந்தமான முடிவுகளை ஆலோசித்து முடிவு செய்யவும். சமூகத்தில் உங்கள் மரியாதை பாதிக்கப்படலாம். பிறருடன் பேசும் போது கவனம் தேவை. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் குறையலாம். உடல் நலனில் அக்கறை தேவை.
மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் தொழில் மற்றும் வியாபாரங்களில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களின் நிதிநிலை சுமாராக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகளிடம் உள்ள உறவில் விரிசல்கள் ஏற்படலாம். எனவே பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கணவன், மனைவி விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். உங்களின் தாயாரின் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.
மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் உங்களின் குடும்பத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கணவன், மனைவி இடையே வாக்குவாதங்கள் வரலாம். எனவே பொறுமையை கையாள்வது அவசியம். நண்பர்கள் உதவி செய்வதில் தயக்கம் காட்டுவார்கள். தொழில் மற்றும் வியாபாரங்களில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்களின் வேலையில் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். சித்திரை மாத ராசி பலன்கள்