Header Ads Widget

<

ஏப்ரல் மாதம் 2023 மேஷ ராசிக்கு வரப்போகும் அதிர்ஷ்ட யோகம் | APRIL MONTH MESHA RASI PALANGAL IN TAMIL 2023



மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு சூரியன், சந்திரன், ராகு, புதன் ஆகிய நான்கு கிரகண சேர்க்கை ஒரே நேரத்தில் நடப்பதால் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு  வாய்ப்பு உண்டு. சிலர் செல்வந்தராக உயர வாய்ப்புகள் உருவாகும். வண்டி, வாகனம், வீடு, மனை வாங்க யோகம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்ததை விட எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணவரவு அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவுகள் அதிகரிக்கும். சிக்கன்னத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வி துறையில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை சில நேரங்களில் குழப்பமான சூழ்நிலை உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. காதலிப்பவர்களுக்கு மாத முற்பகுதியில் சிறப்பாக இருக்கும். காதல் கைகூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில உடல் உபாதைகள்  வந்து போகும். உடல் நலனில் அக்கறை தேவை.

பரிகாரம் :   முருகப்பெருமானை வழிபட நன்மை உண்டாகும்.