Header Ads Widget

<

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 துலாம் ராசிக்கு வரப்போகும் கோடீஸ்வர யோகம் - INDRAIYA DAILY TODAY RASI PALAN IN TAMIL 18.03.2023



துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே வருகிற ஏப்ரல் மாதம் 22ம் தேதி குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறயுள்ளார். இந்த குருபெயர்ச்சியில் உங்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறார். குருபகவான் உங்கள் ராசிக்கு 6வது வீட்டிலிருந்து 7ம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். 7ம் வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம் ஆகும். குருவின் நேரடி பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும். 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தில் மீதும் விழுகிறது. ஆகையால் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியிலும் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளி, பங்காளி வகையில் ஒற்றுமை, என பல அனுகூலம் உண்டாகும். காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும். அதுவே திருமணத்தில் முடியக்கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சிறப்பான முன்னேற்றம் மற்றும் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. வண்டி, வாகனம், வீடு, மனை வாங்க யோகம் உண்டு குடும்பத்தில் வாழ்க்கை துணையின் மூலம் நிதி ஆதாயம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். கடனாக கொடுத்த தொகை கைக்கு வரும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாள் இருந்த உடல் உபாதைகள் அகலும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நண்பர்களால் பல நன்மைகள் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதையை உயரும். நீங்கள் இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் மற்றும் அவமானம் விலகி பொற்காலம் பிறக்கும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆகவே 12 வருடங்களுக்கு பிறகு குருபகவானின் பார்வை உங்கள் ராசியில் விழுவதால், உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி அடுத்த ஒரு வருடத்திற்கு ராஜயோகம் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தி மற்றும் சிவன் வழிபாடு செய்வது சிறப்பாகும். தினமும் அதிகாலையில் சூரியநமஸ்காரம் செய்து வந்தால் சகல சௌபாக்கியம் கிடைக்கும்.