சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரப்போகிறது. இந்த மாதம் தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும். தங்கம் அல்லது தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை தரும். பங்கு சந்தைகளில் இந்த மாதம் முதலீடு செய்யவேண்டாம். வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வில்லாமல் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். சக பணியாளர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரங்களில் பண தேவைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடம் சில பிரச்சனைகள் வந்து போகும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமையாக இருப்பது அவசியம். காதலிப்பவர்களுக்கு காதல் கசக்கும். இந்த மாதம் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கவனச் சிதறல்கள் உண்டாகலாம். விடாமுயற்சி மற்றும் கவனமுடன் படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். பெண்களை பொறுத்தவரை இந்த மாதம் பணிசுமையும், அலைச்சல்களும் உண்டாகலாம். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களின் பரபரப்பான வாழ்க்கை ஆரோக்கியத்தை பாதிக்கலாம். தூக்கமின்மை, செரிமானம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே உடல் நலனில் அக்கறை காட்டவும்.
பரிகாரம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கவும்.
சந்திராஷ்டம நாட்கள் : 18, 19
அதிர்ஷ்ட நாட்கள் : 12, 13