ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும். இந்த மாத பிற்பகுதியில் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரங்களில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். இந்த மாதம் முயற்சிகள் பெரும்பாலும் சுயநலம் சார்ந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபப்படும் சூழல் உருவாகலாம். எனவே எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பிறரிடம் பேசும் போது கவனம் தேவை. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் உண்டாகலாம். ஆகவே விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. நிதி நிலையை பொறுத்தவரை மிதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் லாப, நஷ்டங்கள் இருக்கும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும்.
சில நேரங்களில் கடன் வாங்கக்கூட நேரிடலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்களுக்கு இந்த மாதம் படிப்பில் கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி பெறலாம். ஒரு சிலருக்கு உயர்கல்வி படிக்க வெளி நாடுகளில் சென்று படிக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை தூக்கமின்மை, டென்ஷன் போன்றவை ஏற்படலாம். இதனால் சில உடல் உபாதைகள் வந்து வந்து போகும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஆகவே இந்த மாதம் நீங்கள் எதிலும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது உத்தமம்.
பரிகாரம் : செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபட நன்மை உண்டாகும். சுக்கிரனை வழிபடவும்.