மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கைகூடும். உங்கள் முயற்சிகளில் வெற்றியை காண்பீர்கள். இந்த மாதம் எதிர்பார்க்கப்படும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற உத்தியோக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். வருமான நன்றாக இருந்தாலும், செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பங்கு சந்தை போன்ற முதலீடுகளில் கவனம் தேவை. இந்த மாதம் குடும்ப உறவுகளில் சற்று பின்னடைவு ஏற்படலாம். சிலருக்கு தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் சில ஏமாற்றங்கள் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். இந்த மாதம் எதிலும் பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களின் புதுமையான சிந்தனை திறன் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். மாணவர்களை பொறுத்தவரை இந்த மாதம் படிப்பு மற்றும் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள். சிலருக்கு உயர்கல்வி தொடர வெளியூர் பயணம் செய்ய வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த மாதம் மன அழுத்தம், டென்ஷன் போன்றவை இருக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஆகவே உடல் நலனில் கவனம் தேவை.
பரிகாரம் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்கமன்னாரை வணங்கி வர நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள் : 14, 15
அதிர்ஷ்ட நாட்கள் : 7, 8