Header Ads Widget

<

ஏப்ரல் மாதம் 2023 கடக ராசிக்கு வரப்போகும் சூப்பர் யோகம் - APRIL MONTH KADAGA RASI PALAN INDRAIYA TODAY RASI PALANGAL 2023



கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த பதவிகள் மற்றும் வெகுமதிகள் பெற வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவுகளும் இருக்கும். பங்கு சந்தைகள் ஊகங்கள் மற்றும் முதலீடுகளில் உங்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களை தரும். பங்குசந்தைகளில்  முதலீடு செய்வதில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்கு வாதங்கள் மற்றும் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நன்மை உண்டாகும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஈகோ பிரச்சனைகள் ஏற்படலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்பாக அமையும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு காதல் கைகூடும். பெண்களை பொறுத்தவரை  மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து சிக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். ஒரு சிலருக்கு கவன சிதறல்கள் ஏற்படலாம். மாணவர்கள் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை தூக்கமின்மை, டென்ஷன், சில உடல் உபாதைகள் வரலாம். இதனால் உங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

பரிகாரம் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வழிபடவும்.

சந்திராஷ்டம நாட்கள் : 16, 17

அதிர்ஷ்ட நாட்கள் : 9, 10, 11

சூரிய கிரகணம் 2023 கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்