Header Ads Widget

<

சூரிய கிரகணம் 2023 ராஜயோகம் பெரும் 3 ராசிகள் - INDRAIYA TODAY RASI PANGUNI MATHA RASI PALANGAL 2023



சூரிய கிரகணம் : சந்திரன் பூமியையும், பூமி சூரியனையும்  சுற்றி வரும் நிலையில், சூரியன்-பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும் நிகழ்விற்கு சூரிய கிரகணம் என்று பெயர். இந்த ஆண்டில் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 20ம் தேதி (20.04.2023) நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் வருகிறது. ஏப்ரல் 10ம் தேதி சூரிய கிரகணம் காலை 7.05 மணி முதல் மதியம் 12.29 வரை மொத்தம் 5 மணி நேரம் 24 நிமிடங்கள் வரை இருக்கும். இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தை தரவிருக்கிறது. அந்த ராசிக் காரர்களை இங்கே பார்ப்போம்.

மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு நல்ல பலனை தரும். பணவரவுகள் அதிகரிக்கும். சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அதிகம். நீண்ட நாள் வராமல் இருந்த பணம் வந்து சேரும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.

தனுசு : (DHANUSU) தனுசு ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். நீங்கள் எந்த செயலை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு நல்ல யோகத்தை தரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதையை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.