குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் பல நலத்திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒன்று மகளிர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமாகும். ஆனால் 2 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்னும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதனால் பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு போதிய நிதியின்மை காரணமாக தாமதம் என்றும் மற்றும் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. இந்த நிலையில் புதிய அறிவிப்பிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகளிர்க்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை என்றாலும் இவை அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா ? யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்ற கேள்வி மக்களிடையே இருந்து வந்தது. அதன்படி PHH என்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோ அரிசி வாங்கும் PHH-AAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. NPHH ரேசன் அட்டைகளுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வயது வரம்பு கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாய்மார்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் எந்த ஒரு மாற்றம் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல 60 வயதிற்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்
1. விதைவைகள்
2. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்
3.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்
4. குழந்தை இல்லாதவர்கள்
யாருக்கெல்லாம் கிடைக்காது
1. வருமான வரி செலுத்துபவர்கள்
2. சொந்த வீடு வைத்திருப்பவர்கள், மற்றும் சொத்துக்கள் உள்ளவர்கள்
3. அரசு ஊழியர்கள்
4. மாத வருமானம் பெறுபவர்கள்
5. வசதியுள்ளவர்கள்