Header Ads Widget

<

மார்ச் மாதம் 2023 துலாம் ராசிக்கு வரப்போகும் அதிர்ஷ்ட யோகம் - MARCH MONTH THULAM RASI PALANGAL IN TAMIL 2023



துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இந்த மாதம்  நீங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் புதிய முயற்சிகள் எடுக்கலாம். காதல் திருமணம் வெற்றிகரமாக அமையும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் குறையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். கடன் சுமை குறையும். அரசு வேலைக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக இருந்த வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் சுமூகமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நுட்ப கலைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை அன்பு அதிகரிக்கும். சில நேரங்களில்  கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். இதனால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது  கவனமாக பேச வேண்டும். தேவையற்ற பேச்சை குறைத்து கொள்ளவும். பணவரவு ஓரளவு இருக்கும். சுப செலவுகள் இருக்கும். கடைசி இரண்டு வாரங்கள் நல்ல பணவரவு உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மாணவர்களுக்கு இந்த மாதம் மிதமான காலம் ஆகும். கடினமாக உழைத்தால்தான் வெற்றி பெற முடியும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாராக இருக்கும். உணவு பழக்க வழக்கத்தை சீர்படுத்த வேண்டும். 

பரிகாரம் : சிவன் மற்றும் மஹாலக்ஷ்மியை வழிபட நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் மற்றும் வெள்ளி 

அதிர்ஷ்ட தினங்கள் : 19, 20, 21

சந்திராஷ்டம தினங்கள் : 26, 27

உங்களின் உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்