Header Ads Widget

<

மார்ச் மாதம் 2023 ரிஷப ராசிக்கு வரும் ராஜ யோகம் - MARCH MONTH RISHABA RASI PALAN 2023



ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.தொழில் ஸ்தானத்தில் புதன் சனி கூட்டணியால், பணவரவு அதிகரிக்கும்.புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருவதால் புதிய முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். இந்த மாத முற்பகுதியில்  திருமணம் சுப காரியங்கள் தொடர்பாக முடிவுகளை தள்ளி போடவும். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். வேலையில் புதிய மாற்றங்கள் கிடைக்கும். மார்ச் 13ம் தேதிக்குப் பிறகு திருமண சுப காரியங்கள் பற்றி பேசலாம். பெண்களுக்கு இந்த மாதம் உற்சாகமாக இருப்பார்கள் ஆனால் உடல்நலனில் அக்கறை தேவை.  மாதத்தின் நடுப்பகுதியில் ராசி அதிபதி சுக்கிரன் பன்னிரண்டாம்  வீட்டில் இருப்பதால் காதலிப்பவர்களுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். கவனமுடன் படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த மாதம் முற்பகுதியில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் சுமாராக இருப்பதால் நல்ல சத்தான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.

 

பரிகாரம் : வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி அம்மனையும், சுக்கிரனையும்  வழிபட நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

அதிர்ஷ்ட தினங்கள் : 8, 9, 10

சந்திராஷ்டம தினங்கள் : 15, 16

உடல் எடையை குறைக்கும் 5 எளிய வழிமுறைகள்