மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் நீங்கள் சுறு சுறுப்பாக காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் மனைவி அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். யாராவது உங்களை பற்றி அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுங்கள். உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். வீடு வானம் வாங்க செலவுகள் ஏற்படலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய செயல்கள் சாதகமாக அமையும். தொழில் முன்னேற்றத்திற்காக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். தீ மற்றும் ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. பிறருக்கு உதவிகள் செய்யும் போது யோசித்து செய்வது நல்லது. பெண்கள் இந்த மாதம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். எளிதில் முடிக்க வேண்டிய செயல்கள் காலதாமதம் ஆகலாம். மாணவர்களுக்கு இந்த மாதம் படிப்பில் மந்தமான சூழிநிலையே காணப்படுகிறது. ஆகையால் கவமுடன் படிக்க வேண்டும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை கவனம் தேவை.
பரிகாரம் : புதன் கிழமைகளில் பெருமாளை அர்ச்சனை செய்து வழிபட நன்மை உண்டாகும். மிதுன ராசி பலன்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன், வியாழன்
அதிர்ஷ்ட தினங்கள் : 11, 12
சந்திராஷ்டம தினங்கள் : 17, 18