மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். திருமண சுப காரியங்கள் கைகூடி வரும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். மாத முற்பகுதியில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை கூடும். ப்ரோமோஷன் ஊதிய உயர்வு உண்டு. பணவரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை மற்றும் கூடுதல் பொறுப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்கள் வந்து போகும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். காதல் கைகூடும். மாத பிற்பகுதியில் நீண்ட நாள் இருந்த நோய்கள் அகலும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமும், நிதானமும் தேவை. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். இந்த மாதம் பெண்களுக்கு பல நல்ல பலன்களை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பொருளாதார உயர்வு உண்டு.
பரிகாரம் : மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முருக பகவானை வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட தினங்கள் : 6, 7
சந்திராஷ்டம தினங்கள் : 13, 14