கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு எதிலும் முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரங்களில் திட்டமிட்டு செய்ய்வதன் மூலம் நல்ல பலனை அடையலாம். நீங்கள் இந்த மாதம் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த மாதத்தில் முற்பகுதியில் எதிலும் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வேலைப்பளு அலைச்சல்கள் உண்டு. நீண்ட நாள் இருந்த குடும்ப கவலைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் சகோதரிகளிடம் பேசும் போதும் கவனம் தேவை. இந்த மாதம் பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும். சக மாணவர்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. விட்டு சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு ஏற்படுத்தி கொள்வார்கள். திருமண தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை தோள்பட்டை, கை, கால் வலி வந்து போகும். உடல் நலனில் அக்கறை தேவை.
பரிகாரம் : அம்மனுக்கு பூமாலை அணிந்து அர்ச்சனை செய்து வழிபட நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வெள்ளி
அதிர்ஷ்ட தினங்கள் : 13, 14
சந்திராஷ்டம தினங்கள் : 19, 20, 21