கிழக்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மீண்டும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி மாதம் 24ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை :-
இன்றும், நாளையும் மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அந்த இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.