Header Ads Widget

<

பிப்ரவரி மாதம் 2023 அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள் - FEBRUARY MONTH RASI PALANGAL 2023



மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். இந்த மாதத்தில் சூரியன், சனி மற்றும் சுக்கிரன் உங்கள் பதினொன்றாம் வீட்டில் அதாவது லாப வீட்டில் அமர்வதால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இதன் விளைவாக நீங்கள் பண ஆதாயங்கள், பணியிடத்தில் நல்ல வாய்ப்புகள், பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். உங்களின் எதிர்காலத்திற்காக வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்குறீர்கள் என்றால் இந்த மாத இறுதியில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சில நேரங்களில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. காதல் கைகூடும். குடும்ப பெண்களுக்கு இந்த மாதம் மன நிம்மதியை தரும். மாணவர்களின் கல்வி தரம் உயரும். உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை.

பரிகாரம் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்.


ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு அற்புதங்களும், அதிர்ஷ்டங்களும் நிகழக்கூடிய மாதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த மாதம் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல உறவு மேம்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும் எனவே பொறுமையை கையாள்வது அவசியம். காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும். இந்த மாதத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்க யோகம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடத்தில் சேருவீர்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை.

பரிகாரம் : மஹாலக்ஷ்மியை வழிபடவும். பக்கதர்களுக்கு பிரசாதம் வழங்கவும்.