இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தற்போது BF7 கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதனை தடுக்க தீவிர நடவடிக்கைகளும், புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து முக்கியமான அறிவிப்புகளும், அதிரடி உத்தரவுகளும் வெளியாகியுள்ளன.
ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தற்போது பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் தற்போது இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா அறிகுறிகளோடு வருவதால் தற்போது தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த இரண்டு பயணிகளுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுபராமணியன் கூறுகையில்; இந்த புதிய வகை BF7 கொரோனா பாதித்த ஒருவர் மூலம் 17 பேரை பாதிப்பு அடைய செய்யும் திறன் கொண்டுள்ளவை. ஆகவே மக்கள் அனைவரும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இந்திய முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் கட்டாய சூழ்நிலை வந்தால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசும் கட்டிப்பாக அதை பின்பற்றும் என கூறியுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் புத்தாண்டு உள்ளிட்ட விழாக்காலங்களில் மக்கள் அதிகம் கூட்டம் கூடுவார்கள் என்பதால் இதன் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்றும் இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட சூழ்நிலைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.