மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு புதனும் சுக்கிரனும் ஒன்பதாம் வீட்டில் நுழைவதால் அதிர்ஷ்டம் வலுப்பெறும். பணியிடத்தில் உங்களின் நிலை பலப்படுத்தப்படும். தொழில் வியாபாரத்திற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகள் உதவுவார்கள். உங்களின் உழைப்பிற்கேற்ற நல்ல வருமானம் கிடைக்கும். வணிகம் நல்ல வளர்ச்சி பாதையில் செல்லும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டு. அரசாங்க வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை இரண்டாவது வீட்டில் செவ்வாயின் வக்ர நிலை காரணத்தால் குடும்பத்தில் பதற்றத்தை உண்டாக்கும். வீண் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய தவறு உங்களின் குடும்பத்தின் மொத்த சூழலையும் மாற்றிவிடும். ஆகையால் எதைவும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வந்து போகும் ஆகையால் விட்டு கொண்டு சென்றால் பிரச்சனையை சமாளிக்கலாம்.
திருமணமானவராக இருந்தால் கேது ஏழாவது வீட்டில் இருப்பது திருமண வாழ்க்கையில் சில நேரங்களில் பதற்றத்தை உண்டாக்கும். வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவும் வரலாம். பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. காதல் வாழ்க்கை கசக்கும். பொருளாதாரத்தை பொறுத்தவரை மாதத்தின் முற்பகுதியில் மந்தமாக இருக்கும். ஆகையால் எந்த ஒரு செலவும் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். வீண் செலவுகளை தவிர்க்கவும். பணத்தை சேமித்து வைத்து கொள்ளுங்கள். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில நேரங்களில் உடல் நலக்குறைவு ஏற்படலாம். செரிமான பிரச்சனைகள் வரலாம். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம் : செவ்வாய் கிழமைகளில் ஹனுமான் பகவானை வழிபடவும். கோவில்களில் வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும்.