Header Ads Widget

<

சந்திர கிரகணம் 2022 பரிகார ராசிகள் செய்ய வேண்டியவை - CHANDRA KIRAGANAM MOON LUNAR ECLIPSE LIVE 2022


சந்திர கிரகணம் : சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்விற்கு சந்திர கிரகணம் என்று பெயர். இந்த கிரகணம் பௌர்ணமி நாட்களில் நிகழக் கூடியவை ஆகும்.

கிரகண நேரம் : இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதி பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 5.32 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு கிரகணம் முடிகிறது. 

எங்கெல்லாம் தெரியும் : இந்த சந்திர கிரகணம் இந்தியா, வடகிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பகுதி, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் தெரியும்.  தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 5.39 மணி முதல் சந்திர கிரகனத்தை காண இயலும்.

பாதிப்பு ஏற்படக்கூடிய ராசிகள் 

அஷ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், திருவாதிரை, சுவாதி, சதயம்

எளிய பரிகாரங்கள்

கிரகண நேரத்தில் ஸ்ரீ ராமஜெயம், ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ போன்ற எளிய மந்திரங்களை உச்சரிக்கலாம். கிரகணம் முடிந்ததும் தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள், மூன்று வேப்பிலை கலந்து குளித்து தோஷ நிவர்த்தி பரிகாரத்தை செய்யலாம்.

கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை 

*கிரகணம் நடைபெறும் சமயத்தில் கிரகண அலைகள் தாக்காமல் இருக்க கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் உடல் பலகீனமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.

*சந்திர கிரகண சமயத்தில் சாப்பிட கூடாது. அது செரிமானத்தை குறைப்பதுடன் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். ஆகையால் கிரகணத்தின் ஒரு மணிநேரத்திற்கு முன்போ அல்லது பின்போதான் சாப்பிட வேண்டும்.

*கிரகண சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருள்களை தொடவோ, கையில் வைத்திருக்கவோ கூடாது. 

*கிரகண சமயத்தில் சண்டை, அவதூறு சொற்களை தவிர்க்க வேண்டும்.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை 

*சமைத்த உணவுகள் மீது தர்ப்பை புல்லை வைக்க வேண்டும். எதிர்மறை சக்திகளை தடுக்கும் ஆற்றல் தர்ப்பை புல்லுக்கு உண்டு.

*கிரகண சமயத்தில் இஷ்ட தெய்வங்களை வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.

*கிரகணம் முடிந்த பின்பு, வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் நன்றாக சுத்தமான பின்னர் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வழிபட நன்மை உண்டாகும்.