தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் காலாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அக்டோபர் 13ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காலாண்டு விடுமுறையை கழிக்க வெளியூர் பயணம், சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் LKG, UKG முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 10ம் தேதி திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று சில தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. இந்த திடீர் மாற்றத்திற்கான உரிய காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள், மற்றும் பெற்றோர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.வெளியூர் சென்றுள்ள மாணவ, மாணவிகள் உடனடியாக சொந்த ஊர் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுமட்டுமின்றி விடுமுறை நாட்களில் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட வீட்டுப்படங்களை விரைவாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் CBSC பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து வரும் அக்டோபர் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. CBSC பள்ளிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில் மேலும் விடுமுறை நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு பொருந்தும். CBSC பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறியுள்ளார். இதனால் சி.பி.எஸ்.சி பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று தெரியவந்துள்ளது. இதனால் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.