Header Ads Widget

<

நவம்பர் மாதம் துலாம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும் - NOVEMBER MONTH THULAM RASI PALAN 2022



துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு செல்வ நிலை நன்றாக உள்ளது. ராசியின் அதிபதி சுக்கிரன் தனித்து சாதகமான நிலையில் இருப்பதால் தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் ஏற்றதாக இருக்காது. திருமண முயற்சி தாமதமாகும். குடும்பத்தில் இருக்கும் சிக்கலை சரிசெய்வதில் நேரம் ஓடிவிடும், தடைகளை சரிசெய்ய முடியும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல மாற்றம் நிகழும். சிலருக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் வருமானம் உயரும். ஆனால் அவ்வப்போது பணியில் தடைகள் ஏற்படும். வெற்றியை போராடி பெற வேண்டும். மாணவர்களுக்கு கல்வி நிலை ஓரளவு நன்றாக இருக்கும். கையில் எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கும். சுப விரயங்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண் சார்ந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. நல்ல உறக்கம் வேண்டும். வயதான பெரியோர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.

பரிகாரம் : புதன் கிழமைகளில் பசு மாட்டிற்கு கீரை அல்லது பச்சை தீவனம் வழங்கவும். 

சந்திராஷ்டமம் : நவம்பர் 8, 9, 10