Header Ads Widget

<

நவம்பர் மாதம் மேஷ ராசிக்கு வரும் சூப்பர் யோகம் - NOVEMBER MONTH MESHA RASI PALAN 2022



மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் உங்களின் முயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர்கள். தொழில் பார்வையில் இந்த மாதம் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு வேலையில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் வேலையில் முன்னேறினால் நீங்கள் நல்ல வெற்றியை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்படையும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு மிகவும் நல்ல மாதம் ஆகும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு.  புதன் பகவானுடன் கேது இணைந்திருப்பதால் சிலருக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து சேரும். 

மாத பிற்பகுதியில் புதனும் சுக்கிரனும் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் வெளி வட்டார தொடர்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி நிலை முன்னேற்றம் அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை நல்ல லாபம் கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் சென்று வேலை செய்ய யோகம் உண்டு. மாத பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு பழக்க வழக்கங்களில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை. இந்த மாதம் யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

பரிகாரம் : கால பைரவரை வழிபடவும். பஞ்சாபி நாட்களில் வராகி அம்மனுக்கு வாழைப்பழம், நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள் உண்டாகும்.