Header Ads Widget

<

ஐப்பசி மாதம் துலாம் ராசிக்கு வரும் சூப்பர் யோகம் - AIPPASI MONTH THULAM RASI PALAN 2022



துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களின் ராசி நாதன் ஆட்சி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு தெளிவான சிந்தனைகள் மற்றும் செயல் திறன் அதிகரிக்கும். தனவரவு லாபம் உண்டு. உடன் பிறப்புகளுடன் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வந்து போகும். பொறுமை மிகவும் அவசியம். மற்றவர்கள் மூலம் சில இடையூறுகள் வரலாம். திருமண தடைகள் வரலாம். காதல் வாழ்வில் மற்றவர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். எதிலும் பொறுமையும், அமைதியும் இருந்தால் பிரச்சனை வராது. பணக்கஷ்டங்கள் குறையும்.

தொழில் துறையை பொறுத்தவரை தொழிலில் இதுவரை இருந்த மந்த நிலை நீங்கும். தொழிலில் சில மாற்றம் உண்டாகலாம். உங்களின் கடின உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. புதன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். ஆனால் குருவின் பார்வை வருமானத்தில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம். மாணவர்களுக்கு கல்வி நிலை சமமான பலன்களை தரும்.  சிலருக்கு உயர்கல்வியில் முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படலாம். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை மனதில் பதட்டம் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும். உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். 

பரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வருவது நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 8, 9, 10