சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் நீங்கள் புத்திசாலித்துடன் பேசி எதையும் சமாளிப்பீர்கள். தொழில் துறையில் நல்ல ஆதாயம் உண்டு. உடன் பிறப்புகளால் நன்மைகள் உண்டு. சில நேரங்களில் நீங்கள் பலம் குறைந்தவராக காணப்படுவீர்கள். எந்த ஒரு செயலும் செய்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. யோசிக்காமல் செய்யும் காரியம் தோல்வியில் முடியலாம். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும்.
தொழில் துறையை பொறுத்தவரை ராசிக்கு 6ம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் தொழில் ரீதியான கடன்கள் குறையும். நீண்ட நாள் வந்து சேர வேண்டிய பணம் வந்து சேரும். தொழில் ரீதியாக கஷ்டப்பட்டாலும் ஆதாயம் உங்களை தேடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் உறவு சிறப்பாக இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தந்தைக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
பரிகாரம் : பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிரச்சனைகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : நவம்பர் 4, 5, 6