Header Ads Widget

<

ஐப்பசி மாதம் ரிஷப ராசிக்கு வரப்போகும் அதிர்ஷ்ட யோகம் - AIPPASI MONTH RISHABA RASI PALAN 2022



ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு பல வெற்றிகளை கொடுக்கும். உங்களது மனதில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம், விடாமுயற்சி காரணமாக நல்ல பலன்களை தரும். பொருளாதரம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரும். கணவன், மனைவி இடையே சில நேரங்களில் மனஸ்தாபங்கள் வரலாம். வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சி குறைந்து பிரிந்து செல்ல வாய்ப்பு உண்டு. மாத இறுதியில் திருமணம் கைகூடும். நண்பர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக இருப்பது உத்தமம். 

தொழில் துறையில் போட்டிகள் அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பின் மூலம் தொழில் மற்றும் வியாபாரங்களில் வெற்றியை காண்பிர்கள். நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் பிற பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். குறிப்பாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற நல்ல காலம் ஆகும். ஜாமீன், பத்திரம் கையெழுத்து உள்ளிட்ட விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில நேரங்களில் மனதில் பதட்டம் ஏற்படலாம். தூக்கமின்மை ஏற்படலாம். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை.

பரிகாரம் : வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட தீமைகள் குறைந்து நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டம நாள் : அக்டோபர் 29, 30