மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு திருப்திகரமான மாதமாக அமையும். பல நாட்களாக இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். சில நேரங்களில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பிரச்சனைகள் வரும். அந்த நேரங்களில் பொறுமையாக இருப்பது நல்லது. இல்லற வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி உறவு மேம்படும். குழந்தை பாக்கியம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் சந்தோசம் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு அருமையான காலம் இதுவாகும் சிலருக்கு காதல் திருமணமாக மாறக்கூடும். பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆனால் குடும்பத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
தொழில் துறையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு உண்டு. தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். இதனால் தொழில் விருத்தி அடைய வாய்ப்பு உண்டு. வியாபாரம் சம்பந்தமாக அலைச்சல் உண்டு. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். ஆன்மீக பயணங்களில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசாங்க தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. சிலருக்கு பெற்றோர்களின் சொத்துக்களில் பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகலாம். மற்றபடி ஆரோக்கியத்தில் எந்த வித பிரச்சனைகள் இருக்காது.
பரிகாரம் : கிருஷ்ண பகவானை வழிபடவும். குல தெய்வ வழிபாடு சிறப்பான பலன்களை தரும். அன்னதானம் வழங்கவும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
சந்திராஷ்டமம் : அக்டோபர் 30, 31 நவம்பர் 1