கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உங்களின் விடா முயற்சியின் மூலம் வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். எந்த ஒரு முடிவும் யோசித்து செய்வது நல்லது. குடும்ப வாழ்க்கை ஏற்றம் இறக்கமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு. சுக்கிரன் சாதகமாக உள்ளதால் வீடு, மனை வாங்க யோகம் ஏற்படும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் வேலைப்பளு, குடும்ப உறுப்பினர்களுக்காக அலைச்சல்கள் வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவி இடையே சிறிய பிரச்சனைகள் வந்து போகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனையை சமாளிக்கலாம். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கும்.
தொழில் துறையில் செவ்வாய் பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். கூட்டு தொழிலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். வேலை கிடைக்காதவர்களுக்கு புதிய நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். ஆனால் சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். சுப செலவுகள் உண்டு. பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். மாணவர்களுக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உஷ்ணம் சார்த்த பிரச்சனைகள் வரலாம். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை.
சந்திராஷ்டமம் : நவம்பர் 1, 2, 3
பரிகாரம் : குலதெய்வ வழிபாடு அவசியம். செவ்வாய்க் கிழமைகளில் முருக பகவானை வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கி நன்மைகள் பிறக்கும்.