Header Ads Widget

<

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 முக்கிய மகிழ்ச்சியான அறிவிப்பு - TAMILNADU SENIOR CITIZEN LATEST SCHEME NEWS 2022-2023


60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள்  பயன்பெறும் வகையில் மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். தற்போது மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் புதிய முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதை பற்றி இங்கே பார்ப்போம்.

1. போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியில் மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டமான (SENIOR CITIZEN SAVINGS SCHEME) SCSS-ல் முதலீடு செய்தால் நல்ல நிலையான வருமானத்தை பெறலாம். இந்த கணக்கில் குறைந்தபட்சமாக ரூ.1000 டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்துக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.

2. பஞ்சாப் நேஷனல் வங்கி 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியதார்களின் பென்ஷன் தொகைக்கு ஏற்ப கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. அதாவது 70 வயதிற்குட்பட்ட ஓய்வூதியதார்கள் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயும், குறைந்த பட்சமாக 25000 ரூபாயும் கடன் பெறலாம் அல்லது பென்ஷன் தொகையில் 18 மடங்கு கடனாக பெறலாம்.

3. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு 2 முறை இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதுடன் அவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்காக இலவச சிகிச்சை அளிக்கப்படும் என கர்நாடக முதல் மந்திரி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

4. தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் கடந்த சில ஆண்டுகளாக ஆதார் அட்டை மற்றும் புதிய ஸ்மார்ட் கார்டு விவரம் நலவாரியத்தில் பதிவு செய்யப்படுகிறது. நல வாரிய உறுப்பினர்களுக்கு 60 வயது பூர்த்தியானதும். அடுத்த ஆண்டில் இருந்து ஓய்வூதிய உதவியாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

5. வங்கிகள், தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

6. PM KISAN MAN DHAN YOJANA திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும். ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு பிறகு விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியம் அதாவது ஆண்டுக்கு 36,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

7. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அரசு மானியம் பெரும் ஓய்வூதிய திட்டமான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தை LIC நிர்வகித்து வருகிறது. இந்த திட்டத்தில் சேர்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 2023 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. மூத்தகுடிமக்கள் குறிப்பிட்ட வகை நோய்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டியிருந்தால் வருமான வரிச்சட்டம் 80டிடிபி பிரிவின் கீழ்     ரூ.1 லட்சம் வரை வரித்தள்ளுபடி பெறலாம். 

9. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.50000 வரை பென்ஷன் வழங்கக்கூடிய நடைமுறை உள்ளது.

10. மூத்தகுடிமக்கள் வைப்புத்தொகை, சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பிற இனங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் வரை வருமான வரிச்சட்டம் 80டிடிபி பிரிவின் கீழ் தள்ளுபடி தரப்படுகிறது.