Header Ads Widget

<

ஐப்பசி மாதம் அதிர்ஷ்ட யோகம் பெரும் 5 ராசிகள் - AIPPASI MONTH RASI PALANGAL 2022



விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பலமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. வரவுக்கேற்ற சுபச்செலவுகள் உண்டு. கணவன் மனைவி உறவு மேம்படும். உங்களுக்கு 6ல் ராகு இருப்பதால் வெற்றிக்கு போராட வேண்டியிருக்கும். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். உடன் பிறப்புகளுடன் விரிசல் வரலாம். பொறுமையை  கையாள்வது அவசியம்.  குழந்தைகள் மூலம் ஆதாயம் உண்டு. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஊடகத்துறை, கமிஷன், வியாபாரத்துறையை சார்ந்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில பிரச்சனைகள் வரும். தூக்கமின்மை ஏற்படும். சந்திராஷ்டமம் : நவம்பர் 10, 11, 12

தனுசு : (DHANUSU) தனுசு ராசி அன்பர்களே உங்களின் ராசி நாதன் குரு சுக ஸ்தானத்தில் இருப்பது பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மரியாதை கூடும். திருமண யோகம் உண்டு. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கை திருமணமாக மாறக்கூடும். உங்களுக்கு குருவின் பார்வை சாதமாக இருப்பதால் தொழிலில் முன்னேற்றம், மதிப்பு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். பணவரவு அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மனதில் தைரியம் பிறக்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில கோளாறுகள் வரலாம். சந்திராஷ்டமம் :  அக்டோபர் 18, 19 மற்றும் நவம்பர் 13, 14, 15

மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே இந்த மாதம் பல பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு குறையும். குடும்பத்தில் சந்தோசம் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். காதல் கைகூடும். தொழில் துறையை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு வணிகம் சார்ந்த தொழிலில் நல்ல லாபம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தரம் உயரும். பணவரவு அதிகரிக்கும். சில நேரங்களில் மனதில் திருப்தி இல்லாமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உணவு கட்டுப்பாடு அவசியம். வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படலாம். சந்திராஷ்டமம் :  அக்டோபர் 20, 21 மற்றும் நவம்பர் 15, 16

கும்பம் : (KUMBAM) கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு புதன் உச்ச பலத்தில் பலன் தருவதால் செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சுக்கிரன் 9ல் இருப்பதால் திருமண முயற்சி சாதகமாக அமையும். ஆனால் திருமண வாழ்வில் அனுசரித்து போவது நல்லது. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வீண் பேச்சை தவிர்க்கவும். எதிலும் பொறுமையும் நிதானமாகவும் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகனம் வாங்க சுப செலவுகள் உண்டு. பழைய கடனை அடைப்பீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறிய கோளாறுகள் வந்து போகும். உடல் நலனில் அக்கறை தேவை. சந்திராஷ்டமம் : அக்டோபர் 22, 23 

மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களின் உழைப்பிற் கேற்ற பலன் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வீண் பேச்சை தவிர்க்கவும். இல்லற வாழ்வில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். குழந்தை பாக்கியம் உண்டு. பணவரவு அதிகரிக்கும் போது சேமித்து வைத்து கொள்வது நல்லது. பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. வெளிநாடு தொடர்பான வியாபாரம் ஆதாயம் உண்டு. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. சந்திராஷ்டமம் : அக்டோபர் 24, 25, 26