மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே ஐப்பசி மாதம் உங்களுக்கு களத்திர ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் வேலையில் முன்னேறினால் நீங்கள் நல்ல வெற்றியை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் மூலம் பெருமை உண்டு. வாழ்க்கை துணையின் மூலம் நல்ல ஆதாயம் உண்டு. திருமணம் கைகூடும். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. சுற்றத்தார் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மந்த நிலை ஏற்படும் என்பதால், படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிக்க நல்ல நேரம் இதுவாகும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டு. செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. விரும்பிய இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பேச்சில் கவனம் தேவை. எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மாத இறுதியில் ஆன்மிகம் மற்றும் வெளியூர் பயணங்கள் சென்று வர வாய்ப்பு உண்டு. குடும்ப பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிறு கோளாறு, செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம் : பெருமாளை வழிபடவும். செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.