Header Ads Widget

<

நவம்பர் மாத ராசி பலன்கள் 2022 ராஜ யோகம் பெரும் 4 ராசிகள் - NOVEMBER MONTH RASI PALAN 2022



மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு செல்வ நிலை நன்றாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. அனைத்தும் இருந்தும் ஏதுமில்லாது போன்ற எண்ணம் தோன்றும். திருமண வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் சில போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் கைகூடும். காதல் கசக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சராசரி நிலை உண்டு. சில நேரங்களில் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இந்த மாத பிற்பகுதியில் செவ்வாய் ரிஷபத்தில் வருவதால் வேலை மாற்றம் பற்றிய எண்ணம் வரும். செல்வ நிலை சுமூகமாக இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும். ஆக இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும். 

ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் பிற்பகுதியில் திருப்திகரமான மாற்றம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வாழ்வில் மனநிறைவு உண்டு. குருபார்வை திருமண பாக்கியம் அளிக்கும். புதிய வண்டி வாகனம் போன்ற விஷயங்கள் வாங்கும் நிலை உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் வழக்கமான நிலை இருக்கும். சில நேரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை முற்பகுதியில் சில பிரச்சனைகள் இருந்தாலும், பிற்பகுதியில் நல்ல ஆரோக்கியம் உண்டு. ஆக இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும்.

மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம்  உங்களின் மனம் எதையாவது யோசித்து கொண்டே இருக்கும். குடும்ப வாழ்வில் அனுசரித்து செல்வது நல்லது. இல்லற வாழ்வில் வாக்கு வாதங்கள் வரும். காதல் கசக்கும். பொறுமையும் நிதானமும் கடைபிடிப்பது நல்லது. திருமண முயற்சிகள் தாமதமாகும். தொழில் மற்றும் வியாபாரங்களில் இருக்கும் சிக்கல் படிப்படியாக சரியாகும். திடீர் செலவுகள் வரும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை, ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்கள் இருந்த உடல் உபாதைகள் நீங்கும். உடல் நலம் ஓரளவு மேம்படும். ஆக இந்த மாதம் உங்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும்.

கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இந்த மாத பிற்பகுதியில் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். தன்னம்பிக்கையுடன் எடுக்கும் முயற்சி நல்ல பலனை தரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்லுறவு மேம்படும். காதல் வாழ்வில் முற்பகுதியில் சில பிரச்சனைகள் இருந்தாலும் பிற்பகுதியில் அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்து அல்லது வீடு மாற்றம் செய்யலாம். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. சிலர் தொழிலில் மாற்றம் செய்ய நேரிடலாம். பணவரவு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆக இந்த மாதம் நன்றாகவே இருக்கும்.