Header Ads Widget

<

செப்டம்பர் மாதம் விருச்சிக ராசிக்கு வரப்போகும் அதிர்ஷ்டம் - SEPTEMBER MONTH VIRUCHIGA RASI PALAN 2022

விருச்சிகம் : விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் செவ்வாயின் பார்வை சாதகமான பலன்களை அளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல மாற்றம் இருக்கும். புதிய தொழில் செய்யும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நிதி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீடு, மனை சொத்துக்கள் வாங்க நல்ல மாதம் ஆகும்.  

குடும்ப வாழ்க்கையை பொறுத்த வரை குருபகவானின் வக்கிரம் 5ஆம் வீட்டில் இருப்பது சுப பலன்களை அளிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். திருமணத்திற்காக வரன் பார்ப்பவர்களுக்கு வரன் கைகூடி வரும். இல்லற வாழ்க்கை அமைதியாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் இனிமையான மாதமாக அமையும். மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வி  மேம்படும். கல்வியில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. புதிய வாகனம், ஆபரணம் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் வீடு தேடி வந்து சேரும்.


உடல் ஆரோக்கியம் : உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொருத்தவாவரை  இந்த மாதம் நன்றாக இருக்கும். நீண்ட நாள் இருந்த உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். மனதிற்கு உற்சாகமும் ஏற்படும். இதனால் துணிச்சனால மனநிலை இருக்கும்.


பரிகாரம் :
அமாவாசை தினங்களில் குல தெய்வ கோவிலுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். பைரவரை வழிபடவும்.


சந்திராஷ்டமம்  :  செப்டம்பர் 18, 19