மீனம் : மீன ராசி அன்பர்களே ! இந்த மாதம் குரு பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு ஆகும். தொழிலில் தெளிவான முடிவு எடுக்க தோன்றும். புதிய முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். செவ்வாயின் பார்வை பத்தாவது வீட்டிற்கு கிடைப்பதால் வேலையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவு அதிகரிக்கும்.பேசும் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சிறப்பான கல்வி செல்வம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு உண்டு. திருமண பாக்கியம் உண்டு. பெற்றோர்களின் ஆதரவுடன் திருமணம் கைகூடி வரும்.
குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை கணவன் மனைவி உறவு ஓரளவு நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களின் மூலம் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும். குடும்ப உறுப்பினர்களால் அதிகம் உழைக்க வேண்டி வரும். இல்லத்தரசிகளிடையே பொறுப்புகள் அதிகரிக்கும். காதல் இனிக்கும். காதல் வாழ்க்கை திருமண பந்தமாக மாறும். யாரிடமும் தேவையின்றி வாக்குகள் தர வேண்டாம். பேச்சில் கவனம் இருப்பது நல்லது. அரசு அதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரும். உணவில் கவனம் தேவை. சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை உடல்நலத்தை மேம்படுத்தும்.
வழிபடவேண்டிய தெய்வம் : குல தெய்வம்
பரிகாரம் : மாதம் ஒருமுறை குல தெய்வ கோவில் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடவும். அவ்வாறு செய்தால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம் : செப்டம்பர் 26, 27, 28