மகரம் : மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. ஜென்ம சனி இரண்டாம் இடத்தில் இருப்பது சிறப்பு ஆகும். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். இந்த மாதம் உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புதிய பதவிகள் வரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உங்கள் ராசியில் உள்ள சனிபகவான் ஏழாவது வீட்டினை பார்ப்பது சிறப்பம்சம் ஆகும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை இந்த மாதம் சில பிரச்சனைகள் வந்து போகும். பேச்சுக்களில் நிதானம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். பண விவகாரங்களில் கவனம் தேவை. பணத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு தர வேண்டாம். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். குருவின் பார்வையால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடி வரும். பூர்விக சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
சுய தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் போராட்டமாக இருக்கும். இருந்தாலும் உங்களின் கடின உழைப்பால் நல்ல பலன் கிடைக்கும். சுக்கிரன் பார்வை கோபத்தை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையும், சில நேரங்களில் பதற்றத்தை உண்டாக்கும். படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை சில பிரச்சனைகள் வரும். ஆகையால் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பெற்றோர்களின் உடல் நலனில் கவனம் தேவை. இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும்.
வழிபடவேண்டிய தெய்வம் : சிவன், சனி பகவான்
பரிகாரம் : வாரம் தோறும் சனி பகவானுக்கு எள்ளு கலந்த சாதம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
சந்திராஷ்டமம் : செப்டம்பர் 22, 23, 24