Header Ads Widget

<

செப்டம்பர் மாதம் தனுசு ராசிக்கு வரும் அற்புதங்கள் - SEPTEMBER MONTH DHANUSU RASI PALANGAL 2022

 


தனுசு : தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு நவ கிரகங்கள் சாதகமாக இருக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். காதல் கைகூடும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர யோகம் உண்டு. புதிய வீடு கட்ட முயற்சி செய்யலாம். பணவரவு ஓரளவு இருக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல யோசனை செய்து முதலீடு செய்யவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி திறன் அதிகரிக்கும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

இல்லத்தரசிகளுக்கு நிதானம் தேவை. சமையல் அறையிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணம் செய்வபவர்கள் கவனம் தேவை. தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடல் உபாதைகள் வரலாம். ஆகையால் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். உணவு விசயத்திலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.செப்டம்பர் மாதம் உங்களுக்கு யோகத்தை தரக்கூடிய மாதமாக அமையும்.

வழிபடவேண்டிய தெய்வம் : சிவன் 

பரிகாரம் : பிரதோஷ நாளன்று சிவனுக்கு பாலபிஷேகம் செய்தால் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 20, 21, 22