Header Ads Widget

<

அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்கு வரும் அதிர்ஷ்ட யோகம் - OCTOBER MONTH RISHABA RASI PALAN 2022



ரிஷபம் : ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு உற்சாகமான மாதமாக அமையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். வேலை விஷயமாக செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவான் தொழில் மற்றும் வியாபாரங்களில் செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபத்தை கொடுப்பார். பணவரவு அதிகரிக்கும். இந்த மாதம் திருமணம் சம்பந்தமான வாய்ப்புகள் கூடி வரும். பிள்ளைகள் மூலம் நல்ல அனுகூலம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும். குரு பார்வையில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இந்த மாதம் அதிகம் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த மாதம் வீடு மனை வாங்க யோகம் உண்டு. பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை.

திருமண வரன் தொடர்பான பேச்சுவார்த்தை நல்ல முடிவை கொடுக்கும். காதலிப்பவர்களுக்கு இனிமையான மாதம் ஆகும். காதல் கைகூடும். கணவன் மனைவி இடையே நல்ல பரஸ்பரம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும், உங்களின் கடின உழைப்பால் எளிதாக சமாளிப்பீர்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளது. வரவுகள் அதிகரித்தாலும் வரவுக்கேற்ற செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும். அக்டோபர் மாதம் பிற்பகுதியில் பேசும் வார்த்தையில் கவனம் தேவை . எதிலும் பொறுமையை கையாள்வது அவசியம். சுக்கிரன் ஆறாம் வீட்டில் செல்லும் போது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி வாகை சூடுவார்கள். ஆக மொத்தம் இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையும்.

பரிகாரம் : சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபடவும். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை ஆடைகளை தானம் செய்யவும்.